சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஜூலை 22) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
திங்கள்கிழமை: சவரனுக்கு ரூ. 120 அதிகரித்தது.
செவ்வாய்க்கிழமை: சவரனுக்கு ரூ. 560 அதிகரித்தது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (புதன்கிழமை):
தொடர்ந்து 3-வது நாளாக இன்றைய தினமும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது:
ஆபரணத் தங்கம் (சவரன்): ரூ. 1,680 உயர்ந்து ரூ. 1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் (கிராம்): ரூ. 210 உயர்ந்து ரூ. 13,430-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்வு
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது
கிராம் வெள்ளி: ரூ. 5 உயர்ந்து ரூ. 245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கட்டி வெள்ளி (1 கிலோ): ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2.45 லட்சம் ஆக விற்பனையாகிறது

