இயக்குநர் மணிரத்னத்தின் 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமானவர், சமீபத்தில் தனது பெயரை கௌதம் ராம் கார்த்திக் என மாற்றிக் கொண்டார்.நடிகர் கௌதம் கார்த்திக், தனது பெயரையும் உடலமைப்பையும் மாற்றிக்கொண்டு ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார்.

தனது உடல் மாற்றத்திற்காக அவர் மேற்கொண்ட 9 மாத காலப் பயணத்தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

"9 மாதங்களின் ரத்தம், வியர்வை, அழுகை, எல்லைகளை மீறுதல், பசியை அடக்குதல் எனத் தொடர்ச்சியாக உழைத்ததன் பலன் இது. பழைய காயங்களிலிருந்து மீண்டு, எனது பயிற்சியாளர் தினேஷ் உதவியுடன் மிஸ்டர் எக்ஸ் படத்திற்காகத் தயாரானேன்."

96 கிலோவிலிருந்து கணிசமான எடையைக் குறைத்து கட்டுமஸ்தான உடலமைப்புக்கு மாறியுள்ளார்.

இந்தக் கதாபாத்திரத்தில் என்னை நம்பியதற்கு எனது இயக்குநர் மற்றும் நண்பர் மனு ஆனந்துக்கு எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன். இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றம்," எனப் பதிவிட்டுள்ளார்.

'எஃப்.ஐ.ஆர்' புகழ் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.இப்படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர், கொளதம் கார்த்திக், அனகா  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.