24 Tamil News
மாநிலம்

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் : சென்னையில் நாளை தொடக்கம்

24 Tamil News

reporter

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் : சென்னையில் நாளை தொடக்கம்

தமிழகத்தில் மதுபாட்டில்கள் பொது இடங்களில் வீசப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, டாஸ்மாக் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாளை (ஜனவரி 6-ம் தேதி) முதல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது.
முதற்கட்டமாக சென்னையின் மூன்று முக்கிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது: அதன்படி சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்தியம் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது.

மதுப்பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மதுபாட்டில்களை வாங்கும் போது, அதன் விலையுடன் கூடுதலாக பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10/- வசூலிக்கப்படும். மது வாங்கும் போது பாட்டிலுக்கான கூடுதல் வைப்புத் தொகையாக (Deposit) ரூ. 10 செலுத்த வேண்டும். மது அருந்திய பிறகு காலி பாட்டில்களை அதே மதுபான விற்பனை நிலையத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளிலோ ஒப்படைக்கலாம்.