லண்டனில் இருந்து சிகாகோ நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென 28,000 அடி கீழே இறங்கியதால் அயர்லாந்து விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
திடீர் தொழில்நுட்பக் கோளாறு:
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 777 (Boeing 777) பயணிகள் விமானம் இன்று லண்டனில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்குப் புறப்பட்டது. விமானம் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில நிமிடங்களிலேயே 28,000 அடி வரை கீழே இறங்கியது.
விமானக் கண்காணிப்புத் தரவுகளின்படி (Flight Tracking Data), அயர்லாந்து வான்வெளியில் பறந்தபோது அவ்விமானம் 9,000 அடிக்குக் கீழ் வரை இறங்கியது தெரியவந்தது.
அவசரநிலை பிரகடனம்:
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தில் உடனடியாக அவசரநிலை பிரப்பிக்கப்பட்டது. விமானிகள் சாதூர்யமாகச் செயல்பட்டு அயர்லாந்தில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினர். இருப்பினும், இந்த திடீர் வீழ்ச்சிக்கான துல்லியமான காரணம் குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிடவில்லை.
சமீபத்திய பரபரப்புச் சம்பவம் (பின்னணி):
கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு 174 பயணிகளுடன் சென்ற விமானத்தில், துணை விமானி ஹமாம் அல் ஹமாமி என்பவர் இந்திய தலைமை விமானியான ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி விமானத்தை கவிழ்க்க முயன்றார்.
அப்போது பயணிகள் விரைந்து செயல்பட்டு ஸ்மித் மச்சாரைக் காப்பாற்றி, தாக்குதல் நடத்திய துணை விமானியைக் கைது செய்ய உதவினர். அதிர்ஷ்டவசமாக பயணிகளில் ஒருவர் விமானியாக இருந்ததால் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.





